பிரான்ஸில் கொரோனா வைரஸின் ஐந்தாவது அலை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நடைமுறையில் காணப்படும் தனிமைப்படுத்தல் வரையரைகளை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலப்பகுதியில் நிலவக்கூடிய குளிர்கொண்ட காலநிலையினால் நிலைமை மேலும் மோசமடையக்கூடுமெனவும் அதன்காரணமாக கொவிட் 19 பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் 11 ஆயிரத்து 833 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 33 மரணங்களும் பதிவாகியுள்ளது.
பிரான்ஸில் கொரேனா வைரஸ் தாக்கத்தின் 5வது அலை ஆரம்பம்..
படிக்க 0 நிமிடங்கள்