மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பு நாடுகளும் இணைந்து மியன்மார் இராணுவம் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மாரின் ஜனநாயக தலைவர்கள் வீட்டுக்காவளில் வைக்கப்பட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியமையயடுத்து வன்முறைகள் பரவ ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.