fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிளிநொச்சி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2021 12:55

கிளிநொச்சி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்த்தியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் குமரப்புறம் மற்றும் பரந்தன் பகுதிகளை சேர்ந்த 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2021 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க