காடழிப்பை நிறுத்துவதற்கு உலக நாடுகள் இணக்கம் வெளியிட்டமைக்கு இந்தோனேஷியா விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 2030ம் ஆண்டளவில் காடழிப்பை முழுமையாக இல்லாது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின்போது நூற்றுக்கும் அதிக நாடுகள் உறுதியளித்தன. எனினும் இது நடைமுறை சாத்தியமற்றதென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.
காடழிப்பை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளை தாம் மேற்கொள்ளப்போவதில்லையென்ற சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையில் இந்தோனேஷியா இவ்வாறானதொரு விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாநாட்டில் காடழிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பொருத்தமற்றதும், நியாயமற்றதுமென இந்தோனேஷிய சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகில் மழைக்காடுகளை அதிகம் கொண்ட காடுகளில் இந்தோனேஷியா மூன்றாம் இடத்திலுள்ளது. காடழிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமது நாட்டின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.