வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுன்ஜின் தோட்டத்தில் தடியால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியுள்ளது. மதுபானம் அருந்திய சிலர் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்களை தடுக்க முயற்சித்த குறித்த பெண் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளர்ர. 55 வயதான குறித்த பெண் மவுன்ஜின் தோட்டத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 27 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தடியால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் உயிரிழப்பு..
படிக்க 0 நிமிடங்கள்