நாட்டில் நேற்றைய தினம் 15 கொவிட் மரணங்கள் பட்டியலிடப்பட்டன. அதில் 8 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நேற்று பட்டியலிடப்பட்ட 15 கொவிட் மரணங்களில் 12 பேர் 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாவர். இந்நிலையில் நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 354 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்தனர். இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 234 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 592 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 43 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.