எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படுமென புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்திற்கமைய விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமென அதிகார சபையின் தலைவர் கலாநிதி வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிகரட்டுக்கு விலையை நிர்ணயிப்பதற்கென வெளிப்படை தன்மையுடன் கூடிய விலை சூத்திரமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது இந்த சிகரட் பாவனையே. வருடமொன்றுக்கு 22 ஆயிரம் பேரும் நாளொன்றின் 60 பேர் சிகரட் பாவனையால் அகால மரணமடைகின்றனர். நாட்டு மக்கள் மீது அன்பு செலுத்தும் நபர் என்ற வகையில் இந்த விலை சூத்திரம் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது கவனம் செலுத்தப்படுமென அதிகார சபையின் தலைவர் கலாநிதி வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.