எதிர்வரும் தீபாவளி தினத்தையொட்டி நீண்ட விடுமுறை காணப்படுவதால் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் வியாழக்கிழமை விடுமுறை தினமாக காணப்படுகிறது. அதனையடுத்து வார இறுதி விடுமுறையும் காணப்படுகிறது. குறித்த காலப்பகுதி முக்கியம் வாய்ந்ததாகும். ஏனைய தினங்களை விட சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி செயற்பட வேண்டுமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொவிட் தொற்று பரவாத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நீண்ட விடுமுறையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்