நாட்டில் நேற்றைய தினம் 566 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 639ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 92 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். 14 ஆயிரத்து 787 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினத்தில் கொவிட் தொற்று காரணமாக 17 மரணங்கள் பதிவாகியுள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த 17 மரணங்களுடன் நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.