ஏ – 30 புதிய கொரோனா திரிபு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. ஏ30 கொரோனா திரிபு தொடர்பில் உலகின் பல நாடுகள் அவதானத்துட்ன செயல்படுவதுடன் இலங்கையும் அது குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
“குறித்த ரைஸ் திரிபு செயல்படும் விதத்தை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்படும். இதற்கமைய மேற்கொள்ளப்பட வேண்டிய உயர்ந்தபட்ச நடவடிக்கை குறித்து சுகாதார அமைச்சின் ஊடாக பரிந்துரைக்கப்படும். அரசாங்கத்தின் ஊடாக பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.இது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரவுகளை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.”