நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும், கேகாலை மாவட்டத்தின் அரணாயக்க பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையினால் மத்திய மலைநாட்டில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சீரற்ற காலிலை காரணமாக வட மாகாணத்தின் தாழ் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிறிய நீர்பாச குளங்கள் பல பெருக்கெடுத்துள்ளன. இதனால் விவசாய நிலயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.