நீர் தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர் தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
கலாவௌ மற்றும் பதுளுவௌ ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்ததனால் கலாவாவியின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்தேக்கம், வான்பாயும் மட்டத்தை அடைந்துள்ளது.
பொல்கொல்ல நீர் தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுருஓயா நீர்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன். விநாடிக்கு 8 ஆயிரத்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.