இன்று (01) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி – முதுன்கொட நீர் விநியோக பகுதியில் திருத்தவேலை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
சியம்பலாபேவத்த, பியகம, தெல்கொட, உடுபில – அனுருமுல்ல, தெமலகம, கதுபொட, தெனடன, பெலஹெல, இந்தொலமுல்ல, தொம்போ, நாரங்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.