வட மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு அரச மருத்தவ அதிகாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்பு பெறவுள்ளது. வட மாகாண புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜாவிற்கும் அரச மருத்து அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் நேற்றைய தினம் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தமது பூணை ஒத்துழைப்பை வழங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணக்கம் வெளியிட்டது.

வட மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை..
படிக்க 0 நிமிடங்கள்