தடுப்பூசி வழங்கும் பணிகளும் நாடு பூராகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 698 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
பேருவலை சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவில் உயர்தர மாணவர்களுக்கு பயாகல பண்டாரநாயக்க கல்லூரியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தொடங்கொட சுகாதார வைத்தியர் உத்தியோகத்தர் பிரிவும் தொடங்கொட மிரிஸ்வத்த தேசிய பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இதுவரை ஏதேனும் ஒரு தடுப்பூசியின் முதலாவது டோசை ஒரு கோடியே 49 இலட்சத்து 87 ஆயிரத்து 889 பேரும் அதன் இரண்டாவது டோசை ஒரு கோடியே 31 இலட்சத்து 56 ஆயிரத்து 574 பேரும் பெற்றுள்ளனர்.