18 மற்றும் 19 வயதுகளை உடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுமென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
18 மற்றும் 19 வயதுகளை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இன்று ஆரம்பமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இவ்வேலைத்திட்டம் உத்தேசமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்ற நிலையில் அதிகளவான மாணவர்களுக்கு சுகாதார வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி ஏற்றப்பட்டது. அதன் பின்னரே இன்றைய தினம் நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகின.
அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கிறது. இன்றைய தினம் கொழும்பு உள்ளிட்ட சகல பகுதிகளிலும் 18 மற்றும் 19 வயதுகளையுடைய மாணவர்கள் தடுப்பூசி ஏற்றுவதில் ஆர்வம் காட்டினர்.
இதேவேளை 16 மற்றும் 17 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் வரை நாட்டில் கொவிசீல்ட் , சைனோபாம், ஸ்புட்னிக் வி , பைசர் மற்றும் மொடோர்னா ஆகிய தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றின் முதல் டோசை செலுத்திக் கொண்டோர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 இலட்சத்து 99 ஆயிரத்து 68 ஆக காணப்படுகிறது. அதேபோல் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்து 329 ஆகும். இதேவேளை