fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குசி நகர் விமான நிலையத்திற்கு முதல் விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2021 12:01

இந்தியாவின் குசி நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைத்ததன் பின்னர் இலங்கையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இதன்போது இணைந்திருந்தனர்.

குசி நகர் சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து வருகை தருவதாயின் அது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

இதற்கமையவே ஸ்ரீ லங்கன் விமானமொன்றை முதலில் அங்கு தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. மஹா சங்கத்தினரின் 95 தேரர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சர்களான டி.வி.ஜானக்க, சிசிர ஜயக்கொடி, ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக்க பத்திரகே உள்ளிட்டோர் இவ்விமானத்தின் மூலம் அங்கு புறப்பட்டனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் கோபால் பக்லே ஆகியோரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். இலங்கை யாத்திரிகர்களின் தம்பதீப யாத்திரையே மேலும் இலகுபடுத்தும் வகையில் குஷி நகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2021 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க