fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளுக்கு கென்யாவில் பயிற்சி..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2021 13:06

இலங்கையின் குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளுக்கு கென்யாவில் பயிற்சி..

இலங்கையின் குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்ட வீர, வீராங்கனைகளுக்கு கென்யாவில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கென்ய விளையாட்டுத்துறை அமைச்சருடன் அண்மையில் முன்னெடுத்த பேச்சுவார்த்தையினூடாக அது தொடர்பான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

கென்யா நீண்டதூர ஓட்ட பந்தயங்களில் சர்வதேச ரீதியில் சாதனைகளுக்குரிய வீர, வீராங்கனைகளை உருவாக்கியுள்ளது. உலக தரப்படுத்தலில் முன்னணியிலுள்ள எலிவுட் கிப் ச்கோகே, எபெல் நிக்கருய், ஹெலன் ஒபிரி, பியரிக்ஸ் ச்சொக்கோய் உள்ளிட்ட வீர, வீராங்கனைகள் கென்யாவிலிருந்து உருவாகியவர்களாவர். இந்நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து 10 பேர் அடங்கிய குழுவொன்று கென்யாவுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2021 13:06

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க