சிறுவர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட இணைப்பு அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை செத்சிறிபாய வளாகத்தில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் வகையில் குறித்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.