fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

T – 20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணியின் முதல் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2021 14:13

டுவண்டி டுவண்டி உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. 3வது லீக் போட்டியில் குழு ஏ யில் அங்கம் விக்கும் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரடிப்படி 3.30க்கும் ஆரம்பமாகும். அயர்லாந்து அணிக்கு என்டி பெல்பர்னியும், நெதர்லாந்து அணிக்கு பீட்டர் சீலரும் தலைமைதாங்கவுள்ளன.

இதேவேளை இன்று இடம்பெறவுள்ள 4வது லீக் போட்டியில் குழு ஏ யில் அங்கம் வகிக்கும் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன. இரவு 7.30க்கும் அபுதாபியில் போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு தசுன் ச்சானக்கவும், நமீபியா அணிக்கு கெர்ஹாட் எரஸ்மஸூம் தலைமைதாங்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2021 14:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க