fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியை மெருகூட்டிய பந்துல வர்னபுர உலகுக்கு விடைகொடுப்பு..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2021 12:55

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் முதலாவது தலைவரான பந்துல வர்னபுர இயற்கை எய்தியுள்ளார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 68 வயதான பந்துல வர்னபுர இலங்கை கிரிக்கட் அணியை தேர்ச்சி மிக்க டெஸ்ட் அணியாக மாற்றி பெருமைக்குரியவர்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ரம்புக்கனையில் பிறந்த பந்துல வர்னபுர நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். திடமான நுட்பங்களை கொண்ட வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட பந்துல வர்னபுர சிறந்த பந்துவீச்சாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

1975ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரையான காலப்பதியில் அவர் இலங்கை அணி சார்பாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சு திறன்களை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை கிரிக்கட் அணி சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளில் மற்றும் 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பந்துல வர்னபுர விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2021 12:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க