சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் எப்எம், வசந்தம் தொலைக்காட்சி , ஐரீஎன் என்பவற்றின் செய்தி பிரதிவினரால் ஒழுங்கு செய்திருந்த சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றது.
கல்வி, செல்வம், வீரம், உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களையம் வேண்டி அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையிலானோரின் பங்கேற்புடன் பூஜை வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பொது முகாமையாளர் அருன விஜயசிங்க செயற்பாட்டு பணிப்பாளர் ஹஷந்த ஹெட்டியாராச்சி, ஐரீஎன் செய்தி மற்றும் நடப்பு விவகார பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை சனாதன சர்மா குருக்கள் நடத்திவைத்தார். வசந்தம் எப்எம், வசந்தம் ரீவி, சுயாதீன தொலைக்காட்சி ஊழியர்களும் கலந்துக்கொண்டனர்.