தாயகத்திற்கு பெரும் புகழையும் அபிமானத்தையும் பெற்றுத்தந்த அபே மெனிகே பல வெற்றிகளுடனும் பாராட்டுக்களுடனும் இந்தியாவிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பினார். மெனிகே மகே ஹித்தே பாடல் மூலம் இலங்கை வாழ் மக்களின் உள்ளங்களில் மாத்திரமன்றி உலக வாழ் மக்களினதும் உள்ளங்களை வென்றெடுத்த இளம் பாடகி யொஹினி டி சில்வா மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பினார்.
உலகம் பூராகவும் புகழ் பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் மெனிகே மகே ஹிதே பாடல் யூடீயுப் சமூக வலைதளம் ஊடாக 15 கோடிக்கும் கூடுதலானோர் பார்வையிட்டுள்ளனர். கடந்த மே 22 ஆம் திகதி யூடியூப் சமூக வலைத்தளத்திற்கு தரவேற்றம் செய்யப்பட்ட இப்பாடல் உலக வாழ் மக்களாலும் பெரும் வரவேற்புக்குட்பட்டது. இவர் அடைந்த பிரபல்யத்துடன் இந்தியாவில் இரு இசை நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஹிந்தி திரைப்பட பின்னணி குரலில் பாடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்துடன் இந்தியாவின் ஒரு சில தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் நேர் காணலிலும் ஈடுபட்டார். புகழ்பெற்ற நடிகருடன் பிக்போஸ் நிகழ்ச்சியிலும் பாடல் ஒன்றை இசைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தாயகத்தின் புகழை முழு உலகிற்கும் எடுத்துச் சென்ற யொஹானி நேற்றிரவு 11.25 மணியளவில் மும்பையிலிருந்து ஸ்ரீ லங்கன் விமானத்தின் மூலம் தாயகம் திரும்பினார். கட்டுநாயக்கவிமான நிலையத்தில் இவரை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவருக்கு விசேட பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. யொஹானி டி சில்வா இளம் பாடகி விசேட வாகன பேரணி மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்.