இலங்கை மற்றும் ரஷ்ய குடியரசுகளுக்கு இடையிலான பத்தாவது இருதரப்பு அரசியல் ஆலோசனை கூட்டத் தொடர் மொஸ்கோ நகரில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கை வெளியுறவு செயலாளர் எட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஈகோர் மொல்குலோவ்ப் ஆகியோரின் தலைமையில் இக்கூட்டத்தொடர் இடம்பெற்றது. அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட நபர்களுக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற பல்துறை தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் பிரதிநிதிகள் கலந்துரையாடினர். 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகளுக்கு 65 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக எடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்;டன. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனீதா அபேவிக்ரம லியனகே உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.