தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் 170 மத்திய நிலையங்களில் இச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய நேற்றைய தினம் 97 ஆயிரத்து 166 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பமாகின. இப்பணிகள் எதிர்வரும் வரை முன்னெடுக்கப்படவுள்ளன. மாணவர்கள் தமக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய ஏதாவதொரு தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 இலட்சத்து 16 ஆயிரத்து 803 பேர் ஆகும். இரண்டு மாத்திரைகளையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 24 இலட்சத்து 80 ஆயிரத்து 870 ஆகும்.