பெருந்தோட்ட நிறுவனங்களிடம் உள்ள காணிகளில் 25 வருடகாலம் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளை உணவு பொருள் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நியமித்த காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடையதான பசுமை பொருளாதாரத்திற்கான ஜனாதிபதி செயலணி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த செயலணியின் தலைவர் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு பயிர்ச் செய்கை மேற்கொள்ளாத காணிகள் தொடர்பில் ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் அமைச்சரவை கூட்டங்களில் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
குறித்த காணிகளை சரியாக முகாமைத்துவம் செய்து பயன்படுத்த வேண்டுமெனவும் சுற்றாடல் துறை அமைச்சர் தெரிவித்தார். குறித்த காணிகளை உணவு பொருள் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு காணி உரிமை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்குமெனில் அரசாங்கம் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.