fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடுப்பூசி டிஜிட்டல் அட்டை விநியோகம் விரைவில் ஆரம்பம்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2021 13:15

தடுப்பூசி டிஜிட்டல் அட்டை விநியோகம் விரைவில் ஆரம்பம்..

தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கென முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் குறியீட்டின் அடிப்படையில் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு நபரும் போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2021 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க