fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இறக்குமதி பால்மாக்களுக்கு புதிய விலை அறிவிப்பு..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2021 13:07

இறக்குமதி பால்மாக்களுக்கு புதிய விலை அறிவிப்பு..

அத்தியாசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 350 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷமன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய விலை அதிகரிப்புக்கமைய இறக்குமதி பால் மா ஒரு கிலோ கிராம் 1300 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பெக்கெட் 520 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென பால் மா இறக்குதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2021 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44