நிலுவையிலுள்ள மின்கட்டணங்களை செலுத்த மின்பாவனையாளர்களுக்கு சலுகை காலம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய ஒருவருட சலுகை காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரு மாதங்களுக்கு நிலுவையில் உள்ள 44 பில்லியன் ரூபாவை அறவிட வேண்டிய நிலைக்கு மின்சக்தி அமைச்சு தள்ளப்பட்டுள்ளது. எனினும் நிலுவை தொகையை செலுத்தவுள்ள மின்பாவனையாளர்கள் அதனை 12 மாதங்களில் செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் குறித்த மாதத்திற்கான கட்டணத்துடன் செலுத்த வேண்டும். கட்டண பட்டியலில் நிலுவை வைத்திருப்போர் 12 மாதங்களுக்குள் அதனை செலுத்த முடியுமெனவும், இறுதிப்பட்டியல் குறித்த காலப்பகுதிக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்