கிழக்கு மாகாணத்தில் 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 588 பாடசாலை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகள் 1 முதல் 5 வரையான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை முதற்கட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழிமூல 165 பாடசாலைகளும், தமிழ் மொழிமூல 423 பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன. பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.