தாய்வான் சீனாவிற்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல்நிலை தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. தாய்வானிற்கு சொந்தமான வான்பரப்பில் சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் அண்மையில் பதிவாகியது. இதனால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
இறையாண்மை மிக்க நாடு என்ற அடிப்படையில் சீனாவின் அத்துமீறிய செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென தாய்வான் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கும் தாய்வானிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீபன் தெரிவித்துள்ளார்.