fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு மில்லியன் ஆபிரிக்க பிள்ளைகளுக்கு உயிரை காக்கும் மலேரிய தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2021 13:38

வரலாற்று சாதனையாக ஒரு மில்லியன் ஆபிரிக்க பிள்ளைகளுக்கு உயிரை காக்கும் மலேரிய தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. உலகில் முதலாவது மலேரியா ஒழிப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் இதுவென சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒரு வருடத்தில் அடையாளம் காணப்படும் மலேரிய நோயாளர்களின் 94 வீதமானோர் ஆபிரிக்காவை சேர்ந்தவர்களாவர்.

2019 ஆம் ஆண்டு 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் மலேரியா நோயினால் மரணித்துள்ளனர். மலேரியா நோய் மூலங்களை அழிப்பதற்கான மருந்து மற்றும் நுளம்பு சுருள்கள் பயன்பாட்டினால் நோய் பரவலை குறைத்தாலும் இவ்வாறான தடுப்பூசி பயன்பாட்டினால் அதனை அதிகளவில் தடுக்க முடியுமென உலக சுகாதார அமைப்பின் பிரதாணி டெட்டோஸ் எட்நாம் கெப்ரியஸ் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2021 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க