அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசியாக வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் மூன்றாவது டோசை பெற்றுள்ளார். 65 வயதிலும் கூடியவர்கள் காலம் கடந்த நோய்வாய்க்குட்பட்டவர்கள் அவதானமிக்க தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு 3 வது டோசை வழங்க அமெரிக்காவின் தொற்றுநோயியல் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மத்திய நிலையம் அண்மையில் தீர்மானித்தது. அத்துடன் வேகமாக பரவிவரும் டெல்டா புரள்வை கட்டுப்படுத்துவதற்கும் 3 வது டோஸ் பெரிதும் வழிவகுப்பதாக அமெரிக்காவின் சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. பல மில்லியன் அமெரிக்கர்கள் இதுவரை வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோசை ஏனும் பெற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது டோசை பெற்றுள்ளார்.
படிக்க 0 நிமிடங்கள்