இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் கல்வி துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்திக் கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸிற்கும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் திருமதி மாரிஸ் ஜெய்னுக்கும் இடையில் நிவ்யோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தொழிற்கல்வி தொடர்பாக இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் ஆதரவை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஆட்கடத்தல் குறித்தும்இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் தற்போதுஅமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவுஸ்திரேலியா அறிவுறுத்தப்பட்டது.
ஆசிய நாடுகளுக்கு இடைப்பட்ட செயல்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டின் நிறைவேற்று பணிப்பாளர் ஹைராத் ஷரீப்பேக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜீல் பீரிஸிற்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசுஇவ்வமைப்பிற்கு ஆதரவை வழங்குவதாக அமைச்சர்இதன் போது தெரிவித்தார். உட்கட்டமைப்பு வசதிகள்: தொழில்பயிற்சி, கல்வி, சுற்றாடல் பிரச்சினை போன்ற துறைகளில் இவ்வமைப்பிற்கு இலங்கைளுயுடன் புரிந்துணர்வுடன் செயல்பட முடியுனெ அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.