அவுஸ்திரேலியாவில் மெல்பர்னை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம்
Related Articles
அவுஸ்திரேலியாவில் மெல்பர்னை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், பின்னர் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து கட்டிடங்கள் அதிர்ந்ததோடு, ஒருசில பகுதிகளில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஆயிரம் வீடுகளுக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மெல்பர்னின் அவசர உதவிகளுக்கான அனர்த்த பிரிவு அறிவித்துள்ளது.