வீரகெட்டிய கஜநாயக்க கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு நபருடன் வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையிலேயே நேற்றிரவு வீரகெட்டிய பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து கொலைக்கென பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் இன்றைய தினம் வளஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.