நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளொன்றில் இரண்டாயிரத்துக்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஆயிரத்து 986 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து இரண்டாயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஆயிரத்து 260 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 31 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளொன்றில் இரண்டாயிரத்துக்கும் குறைவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
படிக்க 0 நிமிடங்கள்