இணையத்தளத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் கணணி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய 58 மற்றும் 30 வயதான சந்தேக நபர்கள் தெஹிவளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இலங்கைப் பெண்களை வட்ஸ்எப் கணக்கில் தொடர்புகொண்டு அவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்து, அவற்றின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். அத்துடன் பரிசுகளை பெற்றுக்கொள்ள தமது கணக்கிற்கு பணத்தொகையை வைப்பிலிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர்;, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தினூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட இரு நைஜீரிய பிரஜைகள் கைது..
படிக்க 1 நிமிடங்கள்