அரசாங்கம் இறக்குமதி செய்யும் காபன் நைட்ரஜன் பசளையில் நுண்ணுயிர் நோய்க் கிருமிகள் இல்லையென விவசாய அமைச்சு உறுதி செய்துள்ளது.
அரசாங்கம் சர்வதேச ரீதியாக நன்மதிப்பு பெற்ற நிறுவனங்களிடமிருந்தே சேதன பசளையை இறக்குமதி செய்கிறது. ஒவ்வொரு வகையான பசளைக்கும் உரிய சான்றிதழ் அவசியமாகும். நுண்ணுயிர் நோய்க் கிருமிகள் அற்ற பசளையே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
“அரசாங்கம் இறக்குமதி செய்யும் காபன் நைட்ரஜன் பசளை தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. பொருத்தமற்ற பசளையை இறக்குமதி செய்யப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இலங்கைக்கு பசளை இறக்குமதி செய்யும் போது உரிய தர நிர்ணயங்கள் உள்ளன. இறக்குமதி செய்யப்படும் எவ்வகையான பசளையிலும் மனிதன் மற்றும் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருக்க முடியாது. அவ்வாறு நுண்ணுயிர்கள் காணப்படும் பசளையை அரசாங்கம் இறக்குமதி செய்யாது. கடந்த காலத்தில் இரண்டு கொள்கலன்களில் சேதனப் பசளை நாட்டிற்கு எடுத்துவரப்பட்டது. அவை 3 மாத காலமாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. உரிய தரமின்மையே இதற்கு காரணமாகும். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது தரமற்ற பசளை இறக்குமதி செய்யப்பட்டது. கணக்காய்வாளரின் 2020ம் ஆண்டு அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.”