fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிர்ணய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2021 12:57

அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ள நிர்ணய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெற்சந்தைப்படுத்தல் சபை ஊடாக நெல் கொள்வனவை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கிலோ நாட்டரிசியை 55 ரூபா வரை அதிகரித்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கமைய பல பிரதேசங்களில் தமது நெல்லை நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

வடமாகாணத்திலும் இம்முறை நெல் அறுவடை அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் கிடைக்கப்பெற்ற விளைச்சல் நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதேவேளை விவசாயிகளை பலப்படுத்தும் வகையில் நெல்லுக்கென உயர்ந்தபட்ச விலையை பெற்றுக்கொடுத்து நெற்சந்தைப்படுத்தல் சபையை நிறுவியதன் ஊடாக விவசாயிகளை பாதுகாப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கமே நடவடிக்கை எடுத்ததாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2021 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க