நான்கு இலட்சம் ரூபாவிற்கு அதிக பெறுமதி கொண்ட ஒரு தொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் பொரள்ளை பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி, பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவரென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு தொகை கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்