இலங்கைக்கு எதிரான டுவண்டி – 20 தொடரை தென்னாபிரிக்கா அணி 3 – 0 என கைப்பற்றியுள்ளது. நேற்றைய தினம் மூன்றாவதும், இறுதியுமான போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. அதனடிப்படையில் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பதிவுசெய்தனர். குஷல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், ச்சாமிக்க கருணாரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். காகிசோ ரபாடா, பிஜ்ரோன் போர்டியூன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் 121 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 14.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. குயிண்டன் டிக்கொக் 59 ஓட்டங்களையும், ரீஷா எண்ட்ரிக்கர்ஸ் 56 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாகவும், போட்டி தொடரின் நாயகனாகவும் குயிண்டன் டிக்கொக் தெரிவானார்.