fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் 55 ரூபாவுக்கு நாட்டரிசி நெல் கொள்வனவு..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2021 12:45

இன்று முதல் 55 ரூபாவுக்கு நாட்டரிசி நெல் கொள்வனவு..

விவசாயிகளிடமிருந்து நெல் அறுவடையின்போது போட்டித்தன்மையுடன் கூடிய விலையின் அடிப்படையில் நெல்லை கொள்வனவு செய்யும் நோக்கில் ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. அது தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏற்கனவே நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 50 ரூபாவுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வந்தது. அதனை மேலும் 5 ரூபாவால் அதிகரித்து இன்றைய தினம் முதல் 55 ரூபாவுக்கு கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விலை அதிகரிப்பு தொடர்பில் நெற் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசியாக மாற்றப்பட்டு சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் நூற்றுக்கு 70 வீதத்தை புத்தாக்க சக்தியினூடாக பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டளவில் அது தொடர்பான இலக்கை எட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், 2050ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியும் முழுமையாக காபனேற்றம் செய்யப்படுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2021 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44