எம்பிலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று இரத்தினபுரி கெட்டன்தொல பகுதியில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கனரக வாகனம் வீதியிலிருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகும் விதம் பின்புறமாக பயணித்த வாகனமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் மோட்டார் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கி;ன்றனர். கனரக வாகனத்திற்கும் மோட்டார் வண்டிக்கும் பாரிய சேதம் ஏற்பட்துள்ளதோடு மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயங்களுக்குள்ளாகி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனரக வாகனம் மற்றும் மோட்டார் வண்டியில் பயணித்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.