அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் பிள்ளையார் கோவில் குளத்தின் அபிவிருத்திப் பணிகளையும், iRoad திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் நல்லூர் சோமசுந்தரம் வீதியின் அபிவிருத்திப் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பையேற்று, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமைந்துள்ளது.
கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


