வடகொரியாவின் 73வது சுதந்திர தின விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுகாதார வழிகாட்டுல்களுக்கமைய தயாரிக்கப்பட்ட விசேட உடைகள் இம்முறை, வடகொரிய சுகாதார தின கொண்டாட்டங்கள் இரவு வேளையில் கொண்டாடப்பட்டுள்ளமை விசேடமாகும். செம்மஞ்சல் நிறத்திலான உடைகளுடன் படையினர் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
தலைநகர் பியோங்யாங்கிலுள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் நேற்று நள்ளிரவு இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு ஆரம்பமானது. தமது அணுசக்தி பலத்தை உலகுக்கே காண்பிப்பதற்கென ஒவ்வொரு வருடமும் காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை அணி வகுப்பு இம்முறை சுதந்திர தின விழாவில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. நிகழ்வில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தியோகபூர்வமாக கலந்துக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.