2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். வத்தளை வனவாசல வீதி ஜயந்தி விகாரைக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு கிலோ 666 கிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு 14 கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த 30 வயதான நபரென தெரியவந்துள்ளது.

2 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு..
படிக்க 0 நிமிடங்கள்