fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கினியாவில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இராணுவத்தினால் கலைப்பு..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2021 13:30

கினியாவில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இராணுவத்தினால் கலைப்பு..

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஜனாதிபதி எல்பா கொண்டே தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் அந்நாட்டின் தலைநகர் கோணாக்ரி பகுதியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடுமையான துப்பாக்கிச்சமர் இடம்பெற்றது. இதனையடுத்து அந்நாட்டு அரச தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்;டுக்குள் கொண்டுவந்துள்ள இராணுவ கேர்ணல் மமாடி டம்போயா, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார். இனி அரசாங்கம் தனி ஒரு நபரிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும், அரசாங்கத்தை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் முழு நாட்டையும் கினியா இராணுவம் கைப்பற்றியுள்ளதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை கினிய இராணுவத்தின் செயற்பாட்டுக்கு ஐநா பொதுச்செயலாளர் எட்டனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2021 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க