fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

26ஆவது நாளாகவும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நீடிப்பு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 12:39

26ஆவது நாளாகவும் ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நீடிப்பு..

சம்பள பிரச்சினை காரணமாக ஆசிரியர், அதிபர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை 26ஆவது நாளாக இன்றைய தினமும் நீடிக்கிறது. பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் அவை தோல்வியடைந்துள்ள நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இன்றைய தினமும் எதிர்ப்பு பேரணிகளை நடத்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் ஒன்லைன் கல்வி செயற்பாடுகளும் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 44 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அல்ல எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த 44 பேரும் நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 12:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க