fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பார்சிலோனா கழகத்திற்கு விடைக்கொடுத்தார் லயனல் மெசி..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 12:38

பார்சிலோனா கழகத்திற்கு விடைக்கொடுத்தார் லயனல் மெசி..

பிரபல கால்ப்பந்தாட்ட வீரர் லயனல் மெசி தான் பிரதிநிதித்துவப்படுத்திய பார்சிலோனா கழகத்தில் இருந்து விலகியுள்ளார். புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில் அது கைவிடப்பட்டமையால் லயனல் மெசி பார்சிலோனா கழகத்தில் இருந்து நீங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார்ந்த தடைகளை மேற்கோள்காட்டி முன்னெடுக்கப்படவிருந்த புதிய ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பார்சிலோனா கழகத்திற்கும் லயனல் மெசிக்கும் இடையில் எந்தவொரு தொடர்புகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பார்சிலோனா கழகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. லயனல் மெசி தனது 13ஆவது வயதில் பார்சிலோனா கழகத்துடன் இணைந்துகொண்டுள்ளார். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லயனல் மெசி பார்சிலோனா கழகத்திற்கு உலகளாவிய ரீதியில் புகழை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2021 12:38

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo